ALP Astrology
நிகழ்வு | தலைப்பு |
---|---|
1 |
உங்கள் வாழ்க்கையிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் நிகழும் 👉 https://youtube.com/@alpastrology?si=nWyCMQYJLL7BuaGD
நீங்கள் இந்நூலை (ALP ASTROLOGY BOOKS) முழுமையாக வாசித்திருந்தீர்கள் என்றால், நாம் வாழும் சம காலத்தில் இப்படி ஒருவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற பெருமிதம் நமக்குள் இருக்கும். என்னுடைய வாழ்க்கையில் நான் பார்த்து வியந்த, ஒரு சில அற்புத நிகழ்வுகளை மட்டும்தான் இங்கு குறிப்பிட்டு இருக்கிறேன். இது இல்லாமல் இன்னும் பல அதிசயங்களும், அற்புதங்களும் ஆயிரமாயிரம் இருக்கிறது.
ஒரு திருமணத்திற்கு காத்துக் கொண்டிருக்கும் பெண்ணின் அம்மா கேட்ட ஒரு வார்த்தை, ஒரு பெரிய தாக்கத்தை அவருள் ஏற்படுத்தியது. அதன் மூலம்தான் அட்சய லக்ன பத்ததி எனும் அற்புதமான அதிசய ஜோதிடம் உருவானது. அதனால் இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிடமே, உங்கள் கண்முன் இருக்கும் அதிசயத்தின் அற்புதங்களுக்கு சான்றாக அமைகின்றது.
இந்த அதிசயத்தை நிகழ்த்திய ஒருவர் நாம் வாழும் சம காலத்தில் இருக்கிறார், அவரை நாம் பார்க்கிறோம், அவருடன் சேர்ந்து பயணிக்கிறோம் என்பதை இன்று நினைத்தாலும், அதை நான் ஒரு பாக்கியமாக கருதுகிறேன்.
நீங்களும் ஒருமுறை அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தை படித்தீர்கள் என்றால், அந்த பாக்கியம் உங்களுக்கும் கிடைக்கும்;
உங்கள் வாழ்க்கையிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் நிகழும்.
இன்னும் அதிசயங்களும் அற்புதங்களும் தொடரும்....
நான் வியந்து பார்த்த சில அற்புத நிகழ்வுகளை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன். பல ஆச்சரியங்களும், அதிசயங்களுமாக என் கண்களுக்கு தெரிந்தவை இவை.
ஒன்று, இரண்டு அல்ல பல ஆயிரக்கணக்கான அற்புத நிகழ்வுகளை நடத்தியவரைப் பற்றிதான் நாம் இங்கு பார்க்கப் போகிறோம். இந்த நிகழ்வுகளை எல்லாம் நீங்கள் படிக்கும் போது உங்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய மாற்றம் ஏற்படும்.
என் வாழ்க்கையில் அப்படிப்பட்ட ஒரு மாற்றம் தந்த ஒரு நபரின் மூலமாக நடந்த அதிசயங்களைத்தான் நாம் இங்கு பார்க்கப் போகிறோம்.
உதாரணமாக, அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையைத்தான் முதல் அற்புதமான அதிசயமாக நான் பார்த்தேன். தொன்றுதொட்டு பாரம்பரியமான ஜோதிடக் கலையில், ஒரு புதிய பரிணாம வளர்ச்சியாக, லக்னம் நகரும் என்ற அற்புத நிகழ்வை முதன்முதலாக அறிமுகப்படுத்தி, உணர வைத்து, ஒரு மாற்றத்திற்கு உட்படுத்த வேண்டும் என்றால், அதற்கு காலம் துணை நின்றால் மட்டுமேதான் அதை செய்ய முடியும். காலம் என்பதுதான் இறைவன்.பாரம்பரியமான பல யுகங்களாக கடந்து வந்த ஜோதிடத்தை, இன்றைய நவீன காலத்திற்கு ஏற்றார் போல் ஒரு எளிமையையும், புதுமையையும், ஒரு துல்லியத்தையும் புகுத்தி ஒரு ஜோதிட முறை வருகிறது என்றால், இறைவனுடைய அனுக்கிரகம் இல்லாமல் எதுவுமே நடக்காது என்பதை புரிந்து கொண்டேன்.
நான் பார்த்த முதல் அதிசயமும் அற்புதமும் அட்சய லக்ன பத்ததி ஜோதிடமே, என்னுடைய ஜோதிட தேடலுக்கு விடையாகக் கிடைத்தது. ஜோதிடம் சார்ந்த பல நூறு கேள்விகளை என்னுடைய மனம் கேட்டுக்கொண்டே இருந்தது. இதற்கெல்லாம் இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் ஒரு பதிலைக் கொடுத்தது. இந்த பதில் நான் கேட்ட கேள்விகளுக்கு எல்லாமே தெளிவான விளக்கத்தைக் கொடுத்தது. அதேபோல் உங்களுடைய வாழ்க்கையில் உள்ள பல ஜோதிட தேடல்களுக்கு வரமாக உங்கள் கையில் வந்து நிற்பது, அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் என்பதை உணர வைக்கும் முயற்சியே இந்த நூல்கள்.
என்றென்றும் நன்றியுடன்....
ALP Astrology