அட்சய லக்ன பத்ததி எனும் ALP ஜோதிட முறையில், பிரசன்னம், ALP ஜோதிட கண்டுபிடிப்பாளர். Dr. பொதுவுடைமூர்த்தி.

ALP Astrology

நிகழ்வு தலைப்பு
1

முன்னுரை

full video link: https://youtu.be/3CXBPkOxJYQ?si=KgLNhJuYe1jTWppv

 

 

அட்சய லக்ன பத்ததி எனும் ALP ஜோதிட முறையில், பிரசன்னம். 

ALP ஜோதிட கண்டுபிடிப்பாளர். Dr. பொதுவுடைமூர்த்தி. 

 

அனைவருக்கும் வணக்கம். 

 

இந்த நாள், இனிய நாள். வாழ்வில் எல்லாரும் எல்லா வளமும் பெற வேண்டும். 

 

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில், ALP பிரசன்னம் பற்றிப் பார்ப்போம். 

 

ஏன், ALP பிரசன்னத்தை கொண்டு வந்தேன் என்றால், நம்மிடம் பிரசன்னம் கேட்கும் போது, ஒரு மூணு பேர் வந்திருப்பாங்க. அந்த மூணு பேருக்கும் ஒரே பலன் வருமா என்றால், கிடையாது. வெவ்வேறு பலன் தான், வரும். ஏன்னா,  ஒரே நேரத்துல பிறக்கக் கூடிய குழந்தைகள்,  வெவ்வேறு விதமான சூழ்நிலையில் வளர்றாங்க. அது தான்,  ஒவ்வொரு ஜாதகருக்கும் உள்ள டிஃபரென்ஸ். இப்போ, ALP பிரசன்னம் பார்க்க மூணு பேர் வராங்க. இந்த மூணு பேரும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மாசத்துல வராங்க. 

 

இந்த ஆடி மாசத்துல வரக் கூடியவுங்களுக்கு, ஒரு பிரசன்ன லக்னம், அதாவது இன்னிக்கு கோச்சார லக்னம், கடகம். இப்ப மூணு பேருக்கும் இதே லக்னமா? அப்படின்னா, மூணு பேருக்கும் இதே லக்னம் தான். www.alpastrology.org

 

அப்ப மூணு பேருக்கும் கடன் சார்ந்த விஷயங்கள், கன்னி லக்னம் ஆக வரும். கால புருஷனுக்கு எத்தனாவது லக்னம் இது? கால புருஷனுக்கு ஆறாவது லக்னம். ஆறாவது லக்னம், கடன், வம்பு, வழக்கு, நோய், நொடி, சம்பந்தப்பட்டது. குலதெய்வம் சம்பந்தப்பட்டது, கோயில் சம்பந்தப்பட்டது,  முறைப்பாடு சம்பந்தப்பட்டது, அப்பாவோட தொழில் சம்பந்தப்பட்டது, அப்பாவோட பாக்கியம் சம்பந்தப்பட்டது,  குலத்தொழில் சம்பந்தப்பட்டது, இப்படி நிறைய விஷயங்கள் நம்ம பார்க்கலாம் இதுல. 

 

 

ஆனா வந்தவர் மூணு பேருக்கும் ஒரே பலனா இருக்குமா?  இருக்காதுல்ல. அப்போ நான் என்ன பண்றேன், மூணு பேரு A, B, C. மூணு பேர் வந்திருக்காங்க A என்கிற ஒருத்தர் வந்திருக்காரு, B என்கிற ஒருத்தர் வந்திருக்காரு,  C என்கிற ஒருத்தர் வந்திருக்காரு. இந்த மூணு பேருக்கும்,  இதே பலன் தான். இப்ப நம்ம லக்னத்தில், பிரசன்ன லக்னத்தில் அப்படிக் கிடையாது. 

 

இப்ப நான் ALP பிரசன்னத்துல என்ன பண்றேன், இந்த A என்கிறவர் கிட்ட நான் என்ன கேட்கிறேன், சார் 1-ல் இருந்து 120-க்குள்ள, ஒரு நம்பர் சொல்லுங்க, அப்படின்னு கேட்கிறேன். A என்கிறவர் சொல்றாங்க, உதாரணமா 62. B என்கிறவர் என்ன சொல்றார் 31 என்று சொல்றார். C என்கிறவர் என்ன சொல்றார் 111, என்று. 

 

இப்போ வந்திருக்கிறவர் மூன்று பேருக்கும் இதே லக்னம் தான். ஆனா இந்த மூணு பேரோட நம்பர் சொல்றாங்க பாருங்க அது மட்டும் மாறுது. இப்போ, இந்த கட்டத்துல இருந்து (கன்னி லக்னம்) 1,2,3,4,5,6,7,8,9,10,11,12. இந்த லக்னப்  புள்ளியில் இருந்து, இந்த நம்பர நாம என்ன பண்ண போறோம் நம்ம ஆட்டோமேட்டிக்கா கூட்டப் போறோம். 

 

இப்ப ரெண்டு வகையில, நாம இதுல பிரசன்னம் பாக்கப்  போறோம். இந்த நம்பர வச்சிக்கிட்டு, பிரசன்னம் பாக்கிறது பாத்தீங்கன்னா, இப்ப அறுபதுங்கிறது ஆறு கட்டம்.  இரண்டுங்கிறதும் எடுத்துக்கலாம். இல்லைன்னா என்ன பண்ணலாம் 62 * 3 = 186 டிகிரி, 31* 3 = 93 டிகிரி, 111 * 3 = 333 டிகிரி. 

 

இந்த லக்னப் புள்ளி எங்க இருக்கு? உதாரணமா 10 டிகிரில லக்னப் புள்ளி நிக்குது அப்படின்னா, இது வந்து, இன்னைக்கு கோச்சாரம். இதுல ரெண்டு வகையில பிரசன்னம் பாக்க போறோம். ஒண்ணு 62 அப்படின்னு வந்ததுன்னா, (கன்னி லக்னம் ஒன்றாம் வீடாக எடுத்து) 1, துலாம் 2 விருச்சிகம் 3, தனுசு 4, மகரம் 5, கும்பம் 6. 6 கட்டம் முடிஞ்சு போச்சு. மீதம் இருக்கிறது 2. 62 என்கிறது 6 கட்டம் முடிஞ்சு போச்சு. அடுத்த  ரெண்டுங்குற இத வச்சுட்டும் பலன் எடுக்கலாம். 

 

இப்ப லக்னம் டிகிரி வைஸ் எடுக்கிறோம் அப்படின்னா, உதாரணமா லக்னப் புள்ளி 10 டிகிரி. இப்ப 10 டிகிரி வரும்போது, மீதம் எவ்வளவு இருக்கும் இங்க? 20 டிகிரி பாக்கி இருக்கும் இங்க. மொத்தம் 30° இருக்கும். இதுல உள்ளது. இப்ப 10 டிகிரி முடிஞ்சு போச்சுன்னா, மீதம் 20 டிகிரி. 

 

இப்போ உதாரணமா B என்கிற அவருக்கு ஜாதகம் பாப்போம். இப்ப B -ங்கிறவருக்கு இப்ப இதுல (கன்னி லக்னத்தில்) 20 டிகிரி இருக்குமா.... இதுல (துலாமில்) 30 டிகிரி. இதுல (விருச்சிகத்தில்) 30 டிகிரி. இதுல ALP -ல அட்சய  லக்னத்தில் இருந்து, எப்படி பலன் பார்க்க போறோம்மோ, அதே மாதிரி பிரசன்னத்துல கோச்சாரத்துல இருந்து இந்த மாதிரி எடுக்கிறோம். 93 இருக்கா 93 இல் இருந்து கன்னி லக்னத்தில் 20 டிகிரி (93 - 20 = 73 (மீதம்)), 73 - 30 (துலாமில்) = 43 (மீதம்). 43 - 30 (விருச்சிகத்தில்) = 13 (மீதம்). தனுசில் மீதம் 13 டிகிரி. அப்போ தனுசு ALP பிரசன்னம். 13 டிகிரியில லக்னப் புள்ளி நிக்குது. இது தான் ALP.

 

இப்ப வந்தவரோட லக்னம் என்ன லக்னம்?  தனுசு லக்னம். இவருக்கு என்னவா இருக்கும்? இப்ப இவரோட லக்னத்திற்கு நாலாம் வீடு சம்பந்தப்பட்ட கேள்வி, தொழில் சம்பந்தப்பட்ட கேள்வி, இடம் சம்பந்தப்பட்ட கேள்வி, இந்த லக்னப் புள்ளி, இந்த கிரக நட்சத்திர அதிபதி, இந்த லக்னத்தோட அதிபதிக்கும், இந்த நட்சத்திர அதிபதிக்கும் உதாரணமாக 13.20 வரைக்கும் மூலம் நட்சத்திரம் போகும் 13 டிகிரி அப்போ கேதுவோட நட்சத்திரம் கேது எங்க இருக்கார் இன்னிக்கு? உதாரணமா கோச்சாரத்துல தனுசுலே போடுவோம்.www.alpastrology.com 

 

இந்த லக்னப் புள்ளி (தனுசுலயே) இருக்கிறதுனால, என்னைப் பத்தி, என்னுடைய சுயம் பற்றி, என்னுடைய தனிப்பட்ட கேள்விகள் பற்றி கேட்க போறேன். என்னுடைய வாழ்க்கை எப்படிப் போகும்? என்னுடைய வெளிநாடு வாழ்க்கை எப்படி இருக்கும்? நான், என்னுடைய வாக்கு எப்படி இருக்கும்? என்னுடைய சொல் எப்படி இருக்கும்? என்னுடைய வேலை எப்படி இருக்கும்? என்னுடைய உடல்நிலை எப்படி இருக்கும்? என்னுடைய தோற்றம் எப்படி இருக்கும்? என்னுடைய ஆரோக்கியம் எப்படி இருக்கும்? என்னுடைய கொப்பளம் சம்பந்தப்பட்டது, கட்டி சம்பந்தப்பட்டது, அரிப்பு சம்பந்தப்பட்டது, பயணம் சம்பந்தப்பட்டது, எதிர்பாராத திடீர் லாபங்கள் சம்பந்தப்பட்டது, இந்த விஷயங்கள் பற்றி பார்க்கப் போறோம். 

 

ஏன் இந்த காலகட்டங்களில், இந்த ஜாதகருக்கு, இவ்வளவு பிரச்சனைகள் வருது, அப்படிங்கிற விஷயங்கள் பத்தி பேசப்  போறோம். அதாவது, தனிப்பட்ட ஜாதகரோட வாழ்க்கை பற்றி.

 

இதுவே, இந்த கேது பகவான் மகரத்தில் இருக்கிறார்,  என்றால், சார் நீங்க குடும்பத்தைப் பத்தி கேள்வி கேட்க வந்து இருக்கீங்க. 

 

இதே ஏழாம் வீடான மிதுனத்தில் கேது பகவான் இருக்கிறார் என்றால், சார் உங்க மனைவி பற்றிய கேள்வி கேட்க வந்திருக்கீங்க. 

 

இதே கேது பகவான், பத்தாம் வீடான கன்னியில் இருந்தால், சார் நீங்க தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்காக வந்து இருக்கீங்க. 

 

இதுவே கேது பகவான், பதினோராம் வீடான துலாமில் சம்பந்தப்பட்டால், சார் நீங்க இரண்டாம் தாரம் திருமணம் சம்பந்தப்பட்ட விஷயத்துக்கு வந்து இருக்கீங்க. 

 

இதுவே 12-ல் கேது பகவான் இருந்தால், உங்களுடைய ஆத்ம திருப்திக்காக, உங்களுடைய ஆன்மீகம் சார்ந்த விஷயங்களுக்காவோ, இல்ல தூக்கம் இல்லை என்கிற, ஏன்னா ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை தேடிப் போகிறேன், தேடிப் போகிறேன் என்று சொல்லிட்டு அது தூக்கம் இல்லாமல் போய், பெரிய அளவில் சித்த பிரமை பிடிக்கக்கூடிய காலகட்டமும், இந்த விருச்சிகத்தில் இருக்கக்கூடிய கேது பகவானுக்கு, ஒரு வாய்ப்பு உண்டு. இந்த மாதிரி விஷயங்கள் இருக்கு. 

 

அப்போ ஒரு ஜாதகருக்கு இரண்டு விஷயம், நம்ம பிரசன்னம் எடுக்கலாம். இன்னொரு முறையிலும் இன்னொரு விஷயத்தில் சொல்லிக் காட்டுகிறோம். உதாரணமா, மூணு பேர் வந்தாலும் மூணு பேரும் ஒரே விதமான எண்களை சொல்ல மாட்டார்கள். அதுக்காக தான் இந்த 120 என்பது. அது என்ன அப்படின்னா, நான் என்ன சொல்றேன், நம்மளோட மனிதனுடைய எண்ணங்கள், 120 வரை பரவும். 

 

நம்மளுடைய ஆயுட்காலம், விம்சோத்திரி தசா வரிசைகள் எல்லாமே இந்த 120 -ல் எடுத்தது. அதே மாதிரி, இந்த பிரசன்னத்தையும் நான் 120 ல எடுத்து இருக்கிறேன். ஒரு கட்டத்திற்கு 10. 12 கட்டத்திற்கும் 120. அப்படி எடுத்து இருக்கிறேன். இரண்டு வகையில, நாம பிரசன்னம் பார்க்கிறோம். 

 

இதுல நான் என்ன பண்றேன், ALP சாப்ட்வேரில் என்ன பண்றோம், இது நம்ம ஆட் பண்ணி கொடுத்தாச்சு. வரக் கூடியவரை, 120 க்குள்ள ஒரு நம்பர் சொல்லச் சொல்லுகிறோம். உதாரணமாக, அவர் 111 என்று சொன்னால், அந்த நம்பரை ஆட் பண்ணி, லக்னம், சூரியன், அவருடைய ALP லக்னம் எங்க இருக்கு அப்படின்னு முடிவு பண்ணி, அதிலேயே காமிச்சிரும். 

 

அதுக்கும் பிறகு, குரு பகவான் எங்க இருக்காரு? லக்னத்திற்கு அதிபதி குரு பகவான் எங்க இருக்காரு? இப்படி அந்தந்த கிரகங்கள் அமைப்பு வச்சுக்கிட்டு, வந்தவர்களிடம், உங்கள் கேள்வி வந்து தொழில் சம்பந்தப்பட்ட கேள்வியா? இல்லை உடல்நிலை சம்பந்தப்பட்ட கேள்வியா? இல்லை சித்த பிரமை சம்பந்தப்பட்ட கேள்வியா? இல்லை தடை சம்பந்தப்பட்ட கேள்வியா? இப்படி கேட்கலாம். 

 

இப்போ உதாரணமாக இந்த கேது பகவான், மூல நட்சத்திரத்தில் இருக்கார் அப்படின்னா, அதீதமான பிரச்சனை யாரால வரும்? இந்த ஜாதகராலேயே வரும். 

 

இப்படி நாம ஒரு விஷயத்தை எடுத்து, பிரசன்ன முறையில இந்த ஜாதகத்தை நாம போட்டு வச்சுக்கிட்டு, இல்லை எண்களை கேட்டுகிட்டு, ஜாதகத்தை பார்க்க ஆரம்பிச்சோம்னா, இது ஒரு ஜோதிடருடைய வாக்கு வன்மை, இல்லை பலிதம், அல்லது ஒரு ஜாதகருடைய மிகப் பெரிய எண்ணங்களோட வலிமை எப்படி இருக்கு அப்படிங்கிறத, நாம தெரிஞ்சுக்க முடியும். 

 

ஏன் அப்படின்னா, இவருக்கு பிரசன்னம் போட்டாச்சு. கேள்வி கேட்க வந்தவர் என்ன கேட்க வந்திருக்கிறார். கேள்வி வந்து வேலைக்கு வந்திருக்கு. சார், நீங்க வேலைக்கு வந்து இருக்கீங்களா? இல்ல வேலைக்கு சம்பந்தப்பட்ட பிரச்சனைக்காக வந்திருக்கீங்களா? ஏன்னா எந்த கேள்வி கேட்டாலும் ஒரு 15, 20 கேள்விக்காகத் தான் வரப் போறாங்க. அப்போ நான் முடிவு பண்ணிக்கிறேன். சார், நீங்க வேலை சம்பந்தப்பட்ட கேள்விக்கு தான் வந்து இருக்கீங்களா என்று கேட்கலாம்.  

 

ஒரு ஜாதகர், ஒரு ஜோதிடர் கிட்ட வருவதற்கு முன்பே, என்ன பண்றோம், கேள்வியை முடிவு பண்றோம். அப்ப பதில் இங்கே தானே இருக்க போகுது? கேள்வி இங்க இருக்கு. கேள்வியை கண்டுபிடிச்சிட்டோம். சார் உண்மை தான் சார். கேள்வி வந்து, நான் வேலையில் இடம் மாற்றம் உண்டு. எதிர்பாராம இடம் மாறணும் அப்படின்னு ஒரு ஐடியா இருக்கு. அது உண்மையிலேயே இப்ப அந்த விஷயம் நடக்கப் போகுதா இல்லை எடுத்துக்கலாமா, வேணுமா? வேண்டாமா? 

 

அப்போ நான் முடிவு பண்ண ஒரு கேள்வி, பிரசன்னத்துல அவரோட ஜாதகத்துல அமைப்புல இருந்தது அப்படின்னா, உண்மையிலேயே எனக்கும் என்னுடைய ஜோதிட நிலைக்கும் உள்ள தொடர்புகள் ரொம்ப ஒன்றோடு ஒன்று இணைந்தது. இல்ல நான் ஒரு கேள்வி நினைச்சுட்டு இருக்கும் போது, சார் நீங்க கல்யாணத்துக்கு வந்து இருக்கீங்களா அப்படின்னு கேக்கிறேன். இப்போ, அவர் வந்திருக்கிறது வேலைக்கு. இரண்டுக்கும் உள்ள வித்யாசம் பாத்தீங்கன்னா வேற வேற இருக்கும். அப்போ என்ன அப்படின்னா, ஒண்ணு, நம்ம நிலையை நம்ம உயர்த்தணும். நாம் அந்த நிலைக்கு உயரணும் அப்படிங்கிறத நான் இந்த நேரத்துல சொல்றேன். 

 

நான் எவ்வளவு தான் கணக்கு சொல்லிக் கொடுத்தாலும், ஒரு நூறு பேரு மட்டும் ஏன் வந்து அட்சய லக்ன பத்ததில ஜாதகம் பார்க்குறாங்க அப்படின்னா, அவங்களுடைய வாக்கு வன்மை. அவங்களுடைய ஜாதகத்துல இருக்கக்கூடிய சுய தசா புத்திகள். அவருடைய அட்சய லக்னம். அவருடைய அட்சய ராசி பலமாக இருக்கும் போது, அவர்களுக்கு நல்ல நிலை, வண்டி ஓடுது. வரக்  கூடியவர்களுடைய பிரச்சனைகளை சொல்றாங்க. 

 

நான் என்ன பண்றேன், அதுக்கு தான் என்னுடைய வெப்சைட்ல, என்ன பண்றேன், யார் யாரெல்லாம் அட்சய லக்ன பத்ததில ஜாதகம் பார்க்கிறாங்களோ அவுங்க எல்லாம் அவர்களுடைய புகைப்படத்தை அனுப்புங்க. அட்சய லக்ன பத்ததில நீங்க எல்லாம் ஜாதகம் பாக்குறீங்க அப்படின்னு போடுறேன். 

 

ஏன், எதுக்கு, அப்படின்னா இவங்க இவங்க இந்த அட்சய லக்ன பத்ததில என்கிட்ட படிச்சு இருக்காங்க. இவங்க எவ்வளவு தூரத்துல படிச்சிருக்காங்க அப்படிங்கிற விஷயத்தை உண்மையிலே வெளில கொண்டு வரணும் அப்படிங்கிற ஆசையில தான் ஒரு விஷயத்தை செஞ்சு இருக்கிறேன். இது மாதிரி தான் அட்சய லக்ன பத்ததில பிரசன்ன முறையில் பலன் பார்க்க போறோம். இப்படி நடக்கப் போகுது? எங்க நடக்க போகுது? யார் மூலமா நடக்கப் போகுது? அப்படிங்கிற ஒரு விஷயத்தை கண்டிப்பா இன்னொரு வீடியோவுல தனி பதிவா பதிவு செய்வோம். மீண்டும் ஒரு இனியதோர் நிகழ்வில் சந்திப்போம்.  

 

நன்றி, வணக்கம். 

 

முடிவுரை

என்றென்றும் நன்றியுடன்....


ALP Astrology