ALP மெய்மொழிகள்

Dr.S.Pothuvudaimoorthy ALP Astrology Inventor

நிகழ்வு தலைப்பு
1 ALP மெய்மொழிகள்
ALP MEIMOZHIGAL

முன்னுரை

ALP MEIMOZHIGAL

ALP மெய்மொழிகள்
ALP MEIMOZHIGAL

  •  

கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துபவனே மிகச் சிறந்த வெற்றியாளன்.

 

The most successful person is one who identifies and makes right use of the right opportunity at the right time!

 

  •  

ஆசையின் அளவுகோல் கர்மா!

 

The yardstick of Desire is Karma !

 

  •  

லக்னம் மாறும். உங்கள் வாழ்க்கையும் மாறும்.

 

When the Ascendant (Lagna) changes; So, does your life !

 

  •  

வாழ்க்கை என்பதே வரம்தான். உணர்ந்தால்தான் திருப்தி என்ற முழுமை பெறும்.

 

Life by itself is a boon; only when one realizes it, will he experience gratification!

 

  •  

காரணங்களை ஆராயும் போது, முடிந்த செயலுக்கு விடை கிடைப்பது போன்றது.

 

Analyse the reason behind the occurrence of an event, the answer for the occurrence will be established!

 

  •  

தெளிவாக இருக்க வேண்டும் என்று ஒரு நிகழ்வையும் நிம்மதியாக அனுபவிக்க முடிவதில்லை.

 

Even when someone has clearly in thoughts, he still doesn’t experience peace of mind.

 

  •  

மகிழ்வித்து மகிழ்.

 

Keep everyone Happy and be Happy !

 

 

  •  

இருளை நீக்க ஒளி தேவை. வாழ்வின் இருளை நீக்க ஜோதிடம் என்ற ஒளி தேவை.

 

Light is needed to illuminate darkness. Astrology is the light needed to illuminate the darkness in our life !

  •  

வழிகாட்டுங்கள் நல்வழி கிடைக்கும்.

 

When one guide others, the right path will unravel itself !

 

  •  

முயற்சி என்னுடையது முடிவு இறைவனுடையது.

 

The outcome of all my efforts is ultimately God’s decision !

 

  •  

நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் சரியான பாதையை தேர்வு செய்ய வேண்டும்.

 

If one has to succeed, he has to choose the right path!

 

  •  

நீங்கள் வெற்றி பெறவில்லை என்றால் சரியான பாதையை தேர்வு செய்யவில்லை.

 

If one chooses the wrong path, it becomes the cause of his failure!

 

  •  

வெற்றி நிச்சயம் ஆனால் உங்கள் பாதையின் வேகத்தை பொறுத்தது.

 

Success is definite but directly proportional to the intensity at which one moves in the right direction!

 

  •  

திட்டமிடாத பாதை பலன் இல்லாத வாழ்வு ஆகும் திட்டமிடு உங்கள் வாழ்வு யோகமாக மாறும்.

 

An unplanned path leads to a useless life. Live life with a plan and it will become prosperous!

 

  •  

அனுபவமே முதல் குரு.

 

Experience is the primary Guide!

 

  •  

முயற்சி செய்யக்கூட சில நேரங்களில் தூண்டுகோல் தேவை.

 

Sometimes we need someone to motivate us to even make efforts!

 

 

  •  

அன்பே உலகின் மிகப்பெரிய ஆயுதம்.

 

Love is the world’s most powerful tool!

 

  •  

இலக்கை முடிவு செய். இலக்கை அடையும் வழி கிடைக்கும்.

 

Fix your goals, it’s path will reveal itself!

 

  •  

தெய்வம் என்பது ஊழ்வினை உணர்த்துவது.

 

The one who make us realize our past karmic deeds is God!

 

  •  

கேளுங்கள் கிடைக்கும். இறைவனிடமும் சரி; குருவிடமும் சரி. (முதலில் கேட்கவும்).

 

Ask and you will get what you want, be it from God or from your Guru. (But first one should ask).

 

  •  

வாழ்த்துக்கள் தெரிவிக்க, வாழ்த்துக்கள் தேடி வரும்.

 

When you greet and compliment others, Greetings and Compliments will also reach back to you.

 

  •  

பிரம்மம் என்பது முதலும் முடிவும் உள்ள மாயை.

 

“Brahmam” is the illusion which has a Beginning and an End!

 

  •  

கவனம் தேவை வாக்கிலும் வாழ்க்கையிலும்.

 

Exercise caution – in Words and in Life!

 

  •  

மாற்றம் மனதில் இருந்து தோன்றும் எண்ணமே!

 

Change is a thought that comes from the mind!

 

  •  

மூலமே தன்னம்பிக்கையாகும்.

 

Self confidence is the source.

 

 

  •  

நட்சத்திரம் வழியே கொடுக்கும் ஆற்றல் என்பது நமது கர்ம பதிவுகள் ஆகும்.

 

The power of Nakshatra is its ability to give us the experience from our karmic registry!

 

  •  

எண்ணங்களின் வலிமையே ஒரு மனிதனை உருவாக்குகிறது. ஆனால் கிரகங்கள் வழிவிட்டால்தான் அந்த எண்ணங்களே தோன்றும்.

 

The strength of thoughts make a man, but only if the planets give way, will the thoughts even occur.

 

  •  

அற்ப சுகங்கள் என்னவென்று அறிந்தால் அரியணை ஏறலாம்.

 

If you know what trivial pleasures are, then you can ascend the throne!

 

  •  

தைரிய விரயமே பயம்.

 

Fear is wasted courage!

 

  •  

பக்தி என்பது தேடுவது ஞானம் என்பது தேடி வருவது.

 

To seek is Bhakthi, and that we seek comes with Wisdom!

 

  •  

புரிந்து கொள்வது அறிவு, உணர்ந்து கொள்வது ஞானம்.

 

To understand is Intelligence, and to realize is Wisdom!

 

  •  

கல்லை சிலையாக்கி அழகு பார்க்கும் கண், அதுவே கல்வி.

 

Education is the eye that transforms a stone into an idol and sees beauty!

 

  •  

திறமை என்பது உணர வேண்டிய ஒன்று.

 

Talent is something to be realized!

 

  •  

எதிர்காலத்தை முடக்கும் இறுதிக் காரணி பயமே.

 

Fear is the final factor which fractures the future!

 

  •  

வழிகாட்டுவது வரமாகும்.

 

To be able to guide someone is a boon!

 

 

  •  

அவரவர் பார்க்கும் விதத்தில் இருக்கிறது பக்குவம்.

 

Maturity depends on every individual’s perspective!

 

  •  

அறுவடைப்பற்றி பேசும் முன், நல்விதையை விதைத்திருக்க வேண்டும்.

 

Before we speak of harvesting, we should have sown the good Seeds!

 

  •  

குருவாகக் கேள்.

 

Seek to become a Guru!

 

  •  

நினைத்ததெல்லாம் நடக்கும் படைத்தவன் நினைத்தால்.

 

All our desires will be realized only by God’s will!

 

  •  

நினைப்பதற்கே நின் (உன்) அருள் வேண்டும்.

 

To even think of YOU (God), YOUR blessings are needed!

 

  •  

இயலாமையின் வெளிப்பாடு பொறாமை.

 

Incompetence expresses itself as Jealousy!

 

  •  

வெளிச்சத்திற்கும் ஒரு தூண்டுகோல் தேவை.

 

A trigger is essential even for illumination!

 

  •  

இயலாமையின் வெளிப்பாடு வெறுப்பு.

 

Incompetence expresses itself as Hatred!

 

  •  

அனுபவமே ஆயிரம் வழிகளை/வலிகளை உருவாக்கும்.

 

Experience creates a thousand ways/pains!

 

  •  

விடையில்லா கேள்வி தேடல்.

 

Answerless question is seeking!

 

  •  

நீங்கள் கேட்காமல் கொடுப்பது தெய்வம் (மனித உருவிலும்).

 

God grants your wishes without asking for it (through other people).

 

 

  •  

வளைந்து நெளிந்து செல்லும் பாதை எதுபோலத்தான் வாழ்க்கை பயணமும்.

 

The journey of life is like a winding road with curves and bends!

 

  •  

உயிர் மூச்சு மரம்.

 

Tree is our lifeline (breath of Life)!

 

  •  

அசையா நிலையில் அணுவினையும் ஆட்டி வைப்பவன் இறைவன்.

 

God is the Supreme Being who in His motionless state orchestrates the cosmic dance upto the atomic level!

 

  •  

வேல் வெல்லும்.

 

Vel (The divine weapon) will be victorious!

 

  •  

புரிந்தால் சந்திரன், உணர்ந்தால் குரு, நீங்கள் எதுவாக ஆக வேண்டும், எது நியதி?!

 

To understand is moon; To realize is Guru; What do you want to become? What is right?!

  •  

நன்றி நன்மைக்கே.

 

Gratitude is Good!

 

  •  

வரம் வாங்கி வந்தது தான் வாழ்க்கை.

 

Life is a boon given to us!

 

  •  

கருப்பர் காப்பார்.

 

Karuppar (The Divine) will protect us!

 

  •  

பாராட்டு கிடைக்க பாராட்டு.

 

Appreciate to earn Appreciation!

 

  •  

போதையின் உச்சம் புகழ்.

 

Fame is the Ultimate intoxication!

 

  •  

பாராட்டுங்கள் பாராட்டு கிடைக்கும்.

 

Appreciate and you will receive appreciation!

 

 

  •  

எதிர்பார்ப்பு என்பது இருமுனை கொண்டது - முன்னேற்றம் / ஏமாற்றம்.

 

Expectation has two edges – Progress/Disappointment!

 

  •  

ஆயிரம் வழிகளை பாருங்கள். ஆனால் கடந்த செல்ல ஆயிரம் வழிகளை பார்க்காதீர்கள்.

 

Look at the thousand ways and not at the thousand past pains!

 

  •  

எதுவும் அதுவாக நடப்பதில்லை.

 

Nothing happens by itself!

 

  •  

வாய்ப்பு என்பது கடவுளின் வரம்; வழி என்பது கிரகங்களின் வரம்.

 

Opportunity is a boon from God and the Way is a boon from the Planets!

 

  •  

நிகழ்காலத்தின் கர்மாவின் அளவைப் பொறுத்தது இன்பம்.

 

Profit depends on the measure of one’s present Karma!

 

  •  

இல்லாத ஒன்று இருப்பதாக தோன்றுவதுதான் சூட்சமம்.

 

The non-existent appears to be present in subtlety!

  •  

இயலாமையின் வெளிப்பாடு கோபம்.

 

Anger is an expression of helplessness!

 

  •  

இயலாமை என்பது சரியான நேரத்தில் சரியான விஷயங்களை செய்யாதது.

 

Helplessness is not doing the right thing at the right time!

 

  •  

ஆசையின் அதீத இறுக்கமே வைராக்கியம்.

 

An Extreme Constraint of Desire is Zeal!

 

  •  

தானாக தோன்றினால் வாழ்க்கை, நாமாக தோற்றுவித்தால் வெறும் நாடக வாழ்க்கை.

 

Life has to happen naturally, but if we pretend it, then it is just a dramatic Life.

 

  •  

முடிவில்லாத ஆசையின் முடிவு ஏக்கம்.

 

The End of endless desire is Longing.

 

  •  

உணர்தலின் உச்சகட்டம் – சரணடைதல்.

 

The height of realization is Surrender.

 

  •  

அறிந்தவர்க்கு ஆனந்தமாகும், அறியாதவர்க்கு அச்சமாகும் – இருள்.

 

Darkness is joy for the known and fear for the ignorant.

 

  •  

கண் முன்னே தோன்றி மறையும் மாயை – அன்புடன் நிழல்.

 

The illusion that appears and disappears before our eyes is the shadow.

 

  •  

எதிர்பார்ப்பு இல்லாத நிகழ்வுகளின் வெளிப்பாடே தியாகம்.

 

Action withut expectation is Sacrifice.

 

  •  

பதர் நிமிர்ந்ததும், நெல்மணி குனிந்தும், உணர்த்தும் விதம், நீங்கள் (எதுவாக?) நெல்மணியாக இருக்க வேண்டும்.

 

The matured paddy grains bow down while the young plant is upright. One has to be humble like the paddy grains.

 

  •  

மனவெழுச்சியின் தாக்கம் ஒரு வெற்றியின் அடையாளம் – அதுவே ஊக்கம்.

 

An elevated mind is an indication to success and the source of Encouragement.

 

  •  

எதிர்பார்ப்பு இல்லாத ஒற்றை நிகழ்வுதான் அர்ப்பணிப்பு.

 

Dedication is the singular virtue without any expectation.

 

  •  

தேடல் கர்மாவின் அடிப்படை (முதல்படி / தொடக்கம்).

 

The basis of Karma is seeking (the First step / the beginning).

 

  •  

அறிவின் தேடல் கேள்வியின் ஆரம்பம்.

 

Seeking knowledge begins by asking questions.

 

  •  

வகுத்து வாழ், இல்லையேல் வாழ்க்கையே பாழ்.

 

Prioritise and Live your life else it will be ruined.

 

  •  

இருவரின் விருப்பமும் இல்லாமல் சண்டையும்/சமாதானமும் நடக்கவே நடக்காது.

 

Without consent of both the parties, quarrel or compromise can never happen.

 

முடிவுரை

என்றென்றும் நன்றியுடன்....


Dr.S.Pothuvudaimoorthy ALP Astrology Inventor