அற்புத நிகழ்வுகள்!

விதியினை புரிந்துகொண்டு பரிகாரமாக்கிய குணவதி!

- திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்

நிகழ்வு தலைப்பு
1 விதியினை புரிந்துகொண்டு பரிகாரமாக்கிய குணவதி!

முன்னுரை

விதியினை புரிந்துகொண்டு பரிகாரமாக்கிய குணவதி!

குழந்தை பரிகாரம்

திருமதி குணவதி, தாய்மைக்கு கருத்தரித்திருந்தாலும் தங்காத ஒரு சூழ்நிலையே; ஒரு முறை அல்ல ஒவ்வொரு முறையும்! மருத்துவ பரிசோதனையில் குழந்தை பிறப்பதற்கான முழு தகுதி உடையவள் என்று மருத்துவ பரிசீலனை அங்கீகாரம் பெற்றாலும், இனம் புரியாத நூல் இழையில் தவற விடுவது போல பலமுறை வீழ்ச்சி.

நாட்கள் செல்ல செல்ல மருத்துவர்கள் கொடுக்கும் நம்பிக்கை வார்த்தை தன் செவி மறுத்தது! மறத்தும் போனது! திசைத் தெரியாத திண்டாட்டம்; குழந்தை சத்தம் கேட்கும் பொழுதெல்லாம் மனதில் “எனக்கு” என்ற ஏக்கம்; சாலையில் பயணிக்கும் பொழுது கண்களுக்கு குழந்தை முகம் கொண்ட பேனர்கள் மட்டுமே தட்டுப்படுகிறது! நண்பர்கள் உறவுகள் என எல்லோருமே ‘என்ன விசேஷம்’ என்ற வார்த்தை கொண்டு நலம் விசாரிக்க, மனதின் காயம் ரணமாக; கண்களில் வழியாத கண்ணீருடன் நாட்கள் கடந்து கொண்டிருந்தன. ‘நான் என்ன பாவம் செய்தேன்’ என்ற சிந்தனை மேலோங்கி கோவிலுக்கு தன் பாதங்கள் அடிக்கடி எட்டியது!

இந்தக் கோயிலில் தினம் தினம் வரும் பக்தர்களில் கைவிரல் எண்ணிக்கையில் இவளிடம் பேசும் நண்பர்கள்; மூலவர் சொல்லி வழிகாட்டியது போல அந்த நண்பர்களில் ஒருவர் வாக்குயோகி அவர்களை சந்திக்குமாறு வலியுறுத்தி தொடர்பு எண்ணினை கொடுக்க; கைபேசியில் அழைப்பு எனக்கு வந்தது!

குணவதிக்கு அந்தக் கோயிலில் உள்ள மூலவர் ஒரு வழிகாட்டியாக இருந்தாலும்; அவரது கர்ம வினைகளை அளந்தே படி அளக்கிறார் என்பது மூலக்கருத்து! எப்படி என்பதை பார்போம்.

குணவதியின் ஜாதகக் கட்டங்களை பரிசீலத்து வாக்குயோகி அவர்கள் விவரித்து எடுத்துரைத்தார். அவளது பூர்வ புண்ணிய ஸ்தானம் பலமற்று உள்ளதால், இந்த ஜென்மத்தில் கர்ப்பப்பை பலத்தைக் கொண்டிருந்தாலும், பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில் குழந்தை பாக்கியம் என்பது என்றும் கேள்விக்குறியே என்பதை உணர்த்தும் வண்ணம் “பூர்வ புண்ணியம் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல… இப்படியே காலத்தை கடந்துறவும் வேண்டாம்…. வயிற்றிலிருந்துதான் மடிக்கு வரணுமா?? இல்ல மடிக்கு வந்தால் போதுமா? யோசிச்சு பாருங்க…. மாற்று வழி தேடுங்க….” என்று வாக்குயோகி அவர்கள் சொல்ல, உடனே குணவதி “ஐயா! பூர்வ புண்ணியம் சரியில்லைன்னா… அப்படி நான் என்ன தப்பு பண்ணேன்னு உங்களால சொல்ல முடியுமா” என்றாள்.

கட்டங்கள் இல்லாத பொழுதே துல்லியத் தரவுகளை பிரபஞ்சத்திலிருந்து எடுத்து, தன் வாக்காக பரிசளிக்கும் வாக்குயோகி அவர்களுக்கு, இந்தக் கட்டங்களோடு தன் கண்களை மூடிக்கொண்டு பிரபஞ்சத்துடன் இணைந்தார்.

நம் கண்களுக்கு புலப்படாத அவரது செவியில் கேட்ட குணவதியின் முன் ஜென்ம வினையினைப் பற்றி வாக்குயோகி அவர்கள் “போன ஜென்மத்துல நீங்க ஒரு ஆண், நிறைமாத கர்ப்பிணி பெண்ணை எட்டி மிதித்து இருக்கக் கூடாதுல்ல… தருணங்கள் அலட்சியப்படுத்தப்பட்டு… அந்த வினையே மற்றொரு ஜனனத்தில் உணர்த்துகிறது…! உங்களோட ஆழ்மனத கடந்தீங்கன்னா… உங்களுக்கேப் புரியும்!" என்று சொல்லி முடித்தார்.

குணவதி தற்போது, பூரண சுகத்தோடு, 50 குழந்தைகளை தாய்மை ஸ்தானத்தில் சுமந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

இந்த ஜென்மத்தில் குணவதி செய்திருக்கும் நல்வினைகளே, அவர்களுடைய புரிதலுக்கு வழி வகுத்திருக்கிறது. ஜனனத்தின் நோக்கம் என்னவோ, அதைக் கருத்தில் கொண்டு வாழ்க்கையை நகர்த்திச் செல்ல நற்றுணையாவது நமச்சிவாயமே!!

முடிவுரை

என்றென்றும் நன்றியுடன்....


- திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்