அற்புத நிகழ்வுகள்!

தீக்குச்சி காட்டிக் கொடுக்க மோகன் செம்மையானது!

- திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்

நிகழ்வு தலைப்பு
1 தீக்குச்சி காட்டிக் கொடுக்க மோகன் செம்மையானது!

முன்னுரை

தீக்குச்சி காட்டிக் கொடுக்க மோகன் செம்மையானது!

திருந்திய குடிகாரர்

திரு. மோகன் என்பவர் குடி போதைக்கு அடிமையானவர்; வாக்குயோகி ஐயா அவர்களது நெடுங்கால நண்பர். ஒரு நாள் கட்டங்களைப் பார்த்து வாக்குயோகி ஐயா அவர்கள், தன் நண்பரிடம் “இனி குடிக்கக் கூடாதுயா…. குடிச்சா பெரும் பிரச்சனை…. குடிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணுவீங்களா…?” என்று கேட்க திரு. மோகன் அவர்களும் சத்தியவாக்கினை தெரிவித்தபடி தலையாட்ட, வாக்குயோகி அவர்கள் “இந்த சத்தியம்… விளையாட்டில்லையா…. நல்லா யோசிச்சுக்கணும்…” என்றதும் சத்தியம் தவறமாட்டேன் என்ற நம்பிக்கையை உறுதிப்பட திரு. மோகன் அவர்கள் கொடுத்தார்.

நாட்கள் கடந்தது; நண்பனிடம் கொடுத்த சத்தியத்தை மீறாமல், தான் கொடுத்த வாக்கினை காப்பாற்ற எடுத்த முயற்சியில் தடுமாறி, காலப்போக்கில் யாரும் பார்க்கவில்லை; நண்பனும் பார்க்கவில்லை என்று ராகு காலத்தில் முறிந்தது. பல நாள் மது கடைகளை தாண்டினார்; மனசலனப்பட்டாலும் இறுக்கி முடித்தார்; நண்பர்களோடு கொண்டாட்டம் என்றாலும், கண்களின் எதிரே மது இருந்தாலும், விருப்பத்தை மறைத்து சத்தியத்தை நிறைவேற்றினார்.

இப்படியாக ஒரு நாள், தனிமையில் இருந்த சமயம், யாருக்குத் தெரியப்போகிறது என்று நினைத்துக் கொண்டு, நீர்த்தேக்கம் அணையை உடைத்தது போல, மதுவை ருசித்து மகிழ்கிறார்.  துரதிருஷ்டவசமாக மது அருந்திய 30 நிமிடங்களில் ரத்த வாந்தி எடுக்க, கடும் அச்சத்தின் உச்சியில் தன் மனைவியிடம் தான் தவறு செய்து விட்டதாகவும்; கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றாமல் போனதால் ரத்த வாந்தி எடுத்து, அடுத்து என்னவாகும் என்று தெரியாமல் பீதியில் இருப்பதாக தெரிவிக்கிறார்.

உடனே அவரது மனைவி வாக்குயோகி ஐயா அவர்களை நாடி, நடந்ததை விவரித்து மன்னிப்பு கேட்க; “சரி அவர… உடனே ஹாஸ்பிடல்ல சேருங்க… ரெண்டு நாட்களுக்குள்ள சரி ஆகி விடுவார்… இனிமேல் மது பழக்கம் வேண்டாம்…. எச்சரிக்கையா இருங்க….” என்று சொல்ல திரு மோகன் அவர்கள் இரண்டு நாட்களில் குணமடைந்து தன் வீட்டிற்கு திரும்பி விட்டார்.

நான் வாக்குயோகி ஐயாவிடம் விளக்கம் கேட்க, ஐயா அவர்கள் சொன்னது “லக்னத்தில் ராகுவும் புதனும் இருக்க, எதிர்ப்புக்கு செவ்வாய் சனி சேர்க்கை, வேற என்ன செய்யும்…? இந்த அமைப்பில்… இவரது மதியை கட்டுக்குள் வைத்திருந்தால் தப்பித்திருக்கலாம்…! மாற்ற முடியாத விதி என்றிருந்தால் நான் சொல்லியிருக்கவே மாட்டேன்” என்றார்.

திரு. மோகன் அவர்கள் ஆரோக்கியத்தை மீட்டெடுத்து, உறுதியுடன் குடிபோதையை தவிர்த்து, எப்பொழுதாவது புகை பிடிக்கும் பழக்கத்தை, வேண்டிய நேரத்தில் தொட்டுக் கொள்ளலாமா என்ற எண்ணம் மேலோங்க; மருத்துவம் முடிந்து 40 நாட்களுக்குப் பிறகு சாலையின் ஓரம் இருக்கும் பெட்டிக் கடையில் சிகரெட் ஒன்றை வாங்கி வாயில் வைத்து, பற்ற வைப்பதற்காக தீக்குச்சியை தீக்காக உரசும் அந்த நொடிப் பொழுதில் கைபேசியின் அலறல் சத்தம்!

கைபேசியை வெளியே எடுத்து, யார் என்று பார்க்க, வாக்குயோகி என்று தெரிந்தவுடன் வாயில் வைத்த சிகரெட்டை தரையில் போட்டு மிதித்த வண்ணம் “நான் எந்த தவறும் செய்யலயே… செய்யவும் மாட்டேன்… என் சத்தியத்தை இனி மீறவும் மாட்டேன்…. இதில் முழு உறுதியோடு இருக்கிறேனே….!” என்று திரு மோகன் அவர்கள் உளறி கொட்ட, சிரித்தபடி வாக்குயோகி அவர்கள் “உடம்பு எப்படி இருக்குதுயா… இப்ப நலமா…? இனிமேல் எல்லாம் நலம்தான்!” என்றாராம்.

திரு. மோகன் அவர்கள் அன்றிலிருந்து இன்று வரை குடி போதை மற்றும் புகைப் பழக்கத்திற்கு, தன் மனதை பறிகொடுக்காமல் முழு கட்டுப்பாட்டுடன் நல்லதொரு வாழ்க்கையை ருசித்து வருகிறார்.

40 நாட்களுக்குப் பிறகு கைபேசியில் அழைத்த வாக்குயோகி அவர்கள், எப்படி அந்த குறிப்பிட்ட மணித்துளியை தேர்ந்தெடுத்தார் என்பது இன்றும் ஒரு புரியாத புதிர்!

முடிவுரை

என்றென்றும் நன்றியுடன்....


- திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்