அற்புத நிகழ்வுகள்!

வாக்குயோகியின் சித்தத்தில் அவதரித்த "அட்சய லக்ன பத்ததி"!

- திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்

நிகழ்வு தலைப்பு
1 வாக்குயோகியின் சித்தத்தில் அவதரித்த "அட்சய லக்ன பத்ததி"!

முன்னுரை

வாக்குயோகியின் சித்தத்தில் அவதரித்த "அட்சய லக்ன பத்ததி"!

3 முறை சட்டை மாற்றியது

அட்சய லக்ன புத்ததி புத்தகத்தை வெளியிடும் பொருட்டு, அந்த சில நாட்கள் இரவும் பகலும் வேலை ஓட்டத்தில் கடந்துக் கொண்டிருந்தன. வாடிக்கையாளர்களை சந்தித்து பலன் கூறுவதற்கு கூட வாக்குயோகி ஐயா அவர்களுக்கு நேரம் கிடையாது! “யாரையும் தற்போது பார்ப்பதில்லை…” என்ற முடிவில் இருந்தார். இருப்பினும் தொடர்ச்சியாக வாசற் கதவினை தட்டிக் கொண்டபடி ஐயாவை பார்த்தே ஆக வேண்டும் என்று பிடிவாதத்துடன் இருந்த வெற்றிவேல் அவர்கள், தன் நண்பருடன் வந்த போது நடந்த ஒரு அற்புத நிகழ்வு இது!!

வெற்றிவேல் அவர்கள் வாக்குயோகி ஐயாவை பற்றி நன்கு அறிந்தவர்; பலரும் போல ஐயா அவருடைய வாக்கின் மீது அதீத நம்பிக்கைக் கொண்டவர்; எந்த ஒரு நிகழ்வானாலும், ஐயாவை வந்து பார்த்தபின்பே சில முக்கிய முடிவுகளை எடுப்பது வழக்கம்; அவருக்காக பார்த்ததை விட, அவரது நண்பர்களுக்காக, ஐயாவிடம் ஜோதிடம் பார்த்தது, எண்ணிக்கையில் மிகுதியாகும்!

அப்படி ஒரு நாள் அவருடைய நண்பரான வாசுதேவன் என்பவரை அழைத்துக் கொண்டு வந்தார். பார்த்தே ஆக வேண்டும் என்று முடிவாய் இருந்தவர் தன் நண்பனின் மேல் இருக்கும் தோழமையை வெளிப்படுத்தியது!

திரு வெற்றிவேல் அவர்களது நண்பரான மன்னார்குடியைச் சார்ந்த திரு. வாசுதேவன் அவர்கள் தன்னுடைய தொழிலில் எடுத்து வைத்த அடி ஒவ்வொன்றும் பலமான வீழ்ச்சியை சந்திக்க, கடைசி கட்ட முதலீடு, இதுவரை இழந்ததை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் இருப்பவராம். ஆயினும் இந்த முயற்சி வெற்றி அடையுமா? வீழ்ச்சி அடையுமா? வீழ்ச்சி அடைந்தால் கனவு கண்ட வாழ்க்கையும் சரி; தற்போது கையில் உள்ள வாழ்க்கையும் சரி; பறிபோகிவிடும் என்ற பயத்தின் காரணமாக தன் நண்பனின் கருத்தை நாடி ஆலோசனைக் கேட்டு இருக்கிறார். வெற்றிவேல் அவர்களோ இந்த விஷயத்தைப் பொறுத்தவரை “நாம் பேசி முடிவு எடுப்பதை விட…. வெற்றி நிலைக்கு உமது கிரக நிலைகள் எப்படி உள்ளது என்பதை சிறந்த புகழ்பெற்ற ஒரு ஜோதிடரிடம் கேட்டு அறிவதே மனதிற்கு வலிமையைக் கொடுக்கும்…” என்று அறிவுறுத்தி வாக்குயோகி ஐயா அவர்களை பற்றி விவரித்திருக்கிறார்.

“சரி… சரி…. அப்படி என்றால்…! இந்த முதலீடு நாளை மறுநாள் என்பதால்… நாளையே செல்வோம்?” என்று வாசுதேவன் அவர்கள் கேட்க, வெற்றிவேல் “வாக்குயோகி ஐயாவை அவரது வீட்டில் எப்படியோ பார்த்துப் பிடித்து விடுவோம்” என்று கூறி முடிவு எடுத்தனர்.

மறுநாள் சூரியன் உதித்திருந்தாலும், மேகமூட்டங்களோடு சில்லென்ற தூறல், உலகில் அவர் இருக்கும் சிறு பகுதியினை தூசு தட்டிக்கொண்டிருந்தது. துயில் கலைந்து, கண் விழித்த வாசுதேவன் அவர்களுக்கு சில நாட்களாக, எழுந்தவுடன் எப்பொழுதும் இருக்கும் தொழில் ரீதியான மனக்கலக்கம், மன அழுத்தத்தை கொடுத்து ‘இந்த நாள் எப்படி செல்ல போகிறதோ’ என்ற வேதனையை நினைவூட்டியது. நம்பிக்கை இல்லை என்றாலும் கடந்து தானே ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் தன் நண்பர் வெற்றிவேல் அவர்கள் சொன்னது போல, ஜோதிடம் பார்ப்பதற்காக தன்னை தயார் செய்து, கடைசியாக சட்டையை அணிந்துகொண்டு, மனைவியிடம் “இட்லி ரெடியா” என்றதும் 20 நிமிடங்கள் மேலாகும் என்பதை அறிந்து “இவ வேற…. நேரம் காலம் தெரியாம… இந்த நேரம் காலம் அவளுக்கும் சரி இல்ல… எனக்கும் சரியில்லை… இதுல காலம் எப்படி இருக்குன்னு ஜோதிடம் பாக்கணும்னு வேற……?” என்று முணுமுணுத்த படி மாட்டிய சட்டையை கழற்றி வைத்திருக்கிறார்.

காலை சிற்றுண்டி முடித்து, மீண்டும் கொக்கியில் மாட்டி வைத்த அந்த சட்டையை போட்டுக்கொண்டு, தன் அறையை விட்டு வெளியே வரும்பொழுது தேக்கி வைத்திருந்த அழுத்தத்தின் காரணமாக “அட ஜோதிடம் மேல நமக்குதான் நம்பிக்கை இல்லை…. அப்புறம் எதுக்கு இதை பார்த்துட்டு டைம் வேஸ்ட் பண்ணனும் என தேவை இல்லை…” என்று முடிவு செய்து மீண்டும் அணிந்துகொண்ட தன் சட்டையை கழற்றி விடுகிறார்!

தன் மனைவியின் குரல் “என்னங்க கிளம்பி ரெடியாயிட்டீங்களா” என்றதும் “ஆமா… இப்ப அங்க போய்தான் எல்லாம் விளங்க போகுதா என்ன?!!” என்று விரக்தியுடன் எதிரொலிக்க “அட ஒரு தரம் போய்… என்னன்னு தான் கேட்டுட்டு வாங்களேன்!” என்றாள் அவரது மனைவி.

“சரி… சரி… கேட்டு தொலைக்கிறேன்!" என மீண்டும் மூன்றாவது முறையாக அந்த சட்டையை போட்டுக்கொண்டு வாசப்படியின் வெளியே காலடி எடுத்து வைத்திருக்கிறார் வாசுதேவன் அவர்கள்.

நான் வாக்குயோகியிடம் “இவர் உடும்புப்பிடி பிடித்து உங்களைப் பார்த்தே ஆக வேண்டுமென்று…. தன் நண்பருடன் வெளியே காத்துக் கொண்டிருக்கிறார் வெற்றிவேல் அவர்கள்” என்றதும் வாக்குயோகி “20 நிமிடத்தில் வருகிறேன்” என்றார்!

அத்தருணத்தில் செய்துக் கொண்டிருந்த வேலையில் இடைநேர முழுமையிட்டு, ஜல நீரில் தன் ஐம்புலன்களை புதுப்பித்துக் கொண்டு, எல்லாம் வல்ல முருகப்பெருமான் எதிரே அமர்ந்து 5 நிமிடம் தியானத்திற்கு பின்பு, வெளியே உள்ள திரு.வெற்றிவேல் அவர்களையும் அவரது நண்பரையும் வாருங்கள் என்று அழைத்தார் வாக்குயோகி.

கூப்பிட்ட குரலுக்கு உள்ளே வந்த வெற்றிவேல் மற்றும் வாசுதேவன் அவர்கள் இருக்கையில் அமர்ந்த உடனே, வாக்குயோகி அவர்கள் வாசுதேவன் அவர்களை பார்த்து “என்னையா!! ஜோதிடம் எதுக்குன்னு… மூணு தடவ கழட்டின சட்டையை மாட்டிட்டு வந்தீங்க…. ஜோதிடம் மேல நம்பிக்கை இல்லைனா, அப்புறம் எதுக்கு வந்தீங்க?” என்று நிசப்தத்தில் ஆரம்பித்த முதல் பேச்சாக என் கண்களால் கண்டு, செவியில் விழுந்தது.

வாயடைத்தபடி தன் இருக்கையில் இருந்து உடனே எழுந்து நின்ற வாசுதேவன் அவர்கள் “ஐயா… சாமி… என்ன சொல்றீங்க…? நான் மூணு வாட்டி சட்டையை மாட்னது உங்களுக்கு எப்படித் தெரியும்……!” என்று சொல்லும் பொழுது அவர் கண்களில் கண்ணீர் துளியுடன் தெரிந்த ஆச்சரியமும் திகைப்பும், அவர் தலையை சுற்றிய மூன்று சிட்டுக்குருவிகள் என் கண்களுக்குத் தெரிந்தது!!

எனக்கும் ஆச்சரியம் தான்!! வாக்குயோகி எப்படி இதை சொன்னார் என்று…..

பெயரைக் கேட்கவில்லை; கட்டங்களைக் கூடப் பார்க்கவில்லை; வெற்றிவேல் அவர்களது நண்பரா? உறவினரா? என்று கூடத் தெரியவில்லை; பார்த்த மாத்திரம் எங்கும் நிறைந்திருக்கும் அந்த ஈசன், இவர் நாவில் குடியிருப்பது போல நடந்ததையும், நடந்து கொண்டிருப்பதையும், நடக்கப் போவதையும் தன் ஸித்தியின் வலிமை கொண்டறிந்து தேவையுள்ள இடங்களில் பொருத்தமான வார்த்தைகளை கோர்த்து தாய் தமிழ் ஒலியில் எழுப்பும் இவரது இறை சக்தியை நான் என்றென்றும் கொண்டாடுகிறேன்!!!

வாசுதேவன் அவர்களின் தொழிலைப் பற்றி அடுத்து இருக்கும் நிகழ்வுகளை விவரித்தாரா….? என்பதுதான் உங்களுடைய கேள்வி எனப் புரிகிறது.

அனைத்தும் சுபமே!!

மனிதப் பிறப்பு கர்ம வினையினை கழிப்பதற்குத்தான் என்ற நம்பிக்கை இருந்தால், துக்கம் வரும்பொழுது மனவலி என்றாலும், உடல் வலி என்றாலும் அதை முழுவதுமாக அனுபவித்து கடந்து வருவதே நல்ல தீர்வாகும்.

இதை அறியாதபோது பாதிப்பு அதிகம். அறிந்தால் விழிப்பு நிலை!

அடுத்து வருகின்ற பள்ளத்தை அறிந்து, தன் வாழ்க்கை வாகனத்தின் வேகத்தை குறைக்கவேண்டும் என்ற அபாய ஒலியை ஜோதிடம் மட்டுமே கொடுக்கின்றது.

அக்கணம், கடவுள் ஆசீர்வாதம் இருந்தால், உங்கள் வாழ்க்கையில் இந்த வாக்குயோகியின் சித்தத்தில் அவதரித்த "அட்சய லக்ன பத்ததி" உங்களை வந்துச் சேரும்!!

முடிவுரை

என்றென்றும் நன்றியுடன்....


- திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்