அற்புத நிகழ்வுகள்!

குலதெய்வங்கள் உரையாடும் சாமானியர்!!!

- திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்

நிகழ்வு தலைப்பு
1 குலதெய்வங்கள் உரையாடும் சாமானியர்!!!

முன்னுரை

குலதெய்வங்கள் உரையாடும் சாமானியர்!!!

பேருந்து பயணம் - கர்ப்பிணி பெண் தனியாக

வாக்குயோகி அவர்கள் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர்; ஆடை ஆபரணங்கள் மீது பற்று அற்றவர்; பல கேள்விகளுக்கு உதட்டோர சிரிப்பையே பதிலாக கொண்டவர்; குரு ஸ்தானத்தில் கண்டிப்பானவர்; நல்லொழுக்கத்தை வெகுவாக வலியுறுத்துபவர்; “என்னையா வாங்கய்யா” என்று “ஐயா” போட்டு மரியாதை உடன் கூப்பிட்டு உறவில் உடனடி நெருக்கத்தை ஏற்படுத்துபவர்; பல கோடி ரூபாய் தேடி வந்தாலும் பணத்திற்கு மயங்காதவர்; புகழ் மாலை எத்தனை வந்தாலும், அவர் சம்பந்தம் இல்லை என்பது போல இயற்கைக்கு அர்ப்பணிப்பவர்; சொகுசு வாகனங்கள் இருந்தாலும் சாமானியர் போன்று பேருந்து, ஷேர் ஆட்டோ என பிரயாணம் செய்பவர்; வாக்கில் வல்லவர்; அன்பிற்கு இனியவர்!

திரு. முகுந்தன் என்பவர் ஒரு நாள் ஐயாவை பார்க்க வேண்டும் என்று என்னிடம் கேட்டார். வாக்குயோகி ஐயா வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்ற தரவினை தெரியப்படுத்தி “என்ன விஷயம்” என்று கேட்டேன். “பரவாயில்லை…. நான் காத்திருக்கிறேன்!” என்று என்னிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, ஓர் அற்புத நிகழ்வினை என்னிடம் பகிர்ந்து கொண்டார்!

வாக்குயோகி அவர்கள் தன் சொந்த ஊரான பட்டுக்கோட்டைக்கு ஒரு நாள் அரசு பேருந்தில் சென்றிருக்கிறார். அவர் பேருந்திற்குள் ஏறிய தருணம், அந்தப் பேருந்தில் இருக்கும் அனைத்து இருக்கைகளிலும் பிரயாணம் செய்துகொண்டிருந்தனர்.

ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும், மூன்று பேர் அமரும் இருக்கையில் இரண்டு நபர்கள் மட்டும் அமர்ந்து முழுவதுமாக ஆக்கிரமித்தது போல பிரயாணம் செய்து கொண்டிருந்தவர் தேவராஜ் பாண்டியன் மற்றும் அவரது கூட்டாளி சூரிமுத்து.

வாக்குயோகி ஐயா அவர்கள் நின்று கொண்டிருந்ததை பார்த்தும், அவர்கள் உட்காருவதற்காக இடம் கொடுக்கவில்லை. சொல்லால் கேட்டதற்கும் இணங்கவில்லை!

இப்படி முரட்டுத்தனமாக இருந்த தேவராஜ் பாண்டியன் மற்றும் அவரது கூட்டாளி, அந்தப் பிரயாணத்தில் தன் பூர்வீக ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். முன்பொருநாள் அந்தப் பூர்வீக ஊரில் உள்ள கோயில் திருவிழாவில் தன் கூட்டாளியோடு எதிர் தரப்பிடம் வெட்டுக்குத்து சண்டையிட்ட தேவராஜ் பாண்டியன், நாலரை வருடங்களுக்குப் பிறகு தன் மனைவி கர்ப்பமாக இருப்பதை ஒட்டி சீமந்த அழைப்பினை தன் உறவுகளுக்குக் கொடுப்பதற்காக சொந்த ஊரின் மண்வாசம் பிடிக்கச் செல்கின்றார்.

வாக்குயோகி அவர்கள் மட்டும் நின்று கொண்டிருக்க, அந்தப் பேருந்து வழக்கம் போல அதீத வேகத்தில் சக்கரங்களை சுற்றிக் கொண்டிருந்தது. வீசும் காற்றின் சத்தம் ஸ்பரிசத்தோடு ஒவ்வொருவரின் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்க, இதற்கிடையே ஒரு குரலோசை தெள்ளத் தெளிவாக கேட்டதாம் தேவராஜ் பாண்டியனுக்கு.

“என்னையா!! வீட்ல கர்ப்பமான மனைவியை தனியா விட்டுட்டு வந்து இருக்கீங்க…. சொந்த ஊருக்கு போய்கிட்டு இருக்கீங்க. அதுவும் பிரச்சனையை நோக்கி போய்கிட்டு இருக்கீங்க. கவனமா பார்த்து போங்கப்பா.” என்று சொல்லிவிட்டு ஜன்னல் வழியே பார்த்தபடி திரும்பி விட்டாராம் வாக்குயோகி.

அதைக் கேட்ட தேவராஜ் பாண்டியன் மற்றும் அவரது கூட்டாளி சூரிமுத்து, தன் தலையை சுற்றி இங்கும் அங்குமாய் தேட, அவர்களுடைய எதிர் தரப்பினர் சம்பந்தப்பட்ட எவரும் இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்த பின்னர் ஒருவருக்கொருவரை பார்த்துக் கொண்டு “என்னடா இது நம்ம கதையை அப்படியே இவர் சொல்றாரு. முன்ன பின்ன இந்த ஆளை நம்ம ஊர்ல பார்த்ததே இல்லையேப்பா”, என்று சொல்லி வியப்படைய தேவராஜ் பாண்டியன் “அப்படி இருந்தாலும் என் பொண்டாட்டி வீட்டில் கர்ப்பமாக இருக்கிறானு… எப்படி தெரியும் இவருக்கு!!” என்று நினைத்தபடி ஒன்றும் புரியாமல் இருக்க, பின் இருக்கையில் உட்கார்ந்து கொண்டிருந்த திரு. முகுந்தன் அவர்கள் வாக்குயோகி ஐயா அவர்களை பார்த்து “ஐயா! நீங்க இங்கே உட்காருங்க… நான் எழுந்துகிறேன்… வாங்க!” என்று அழைத்தார். அதற்கு வாக்குயோகி ஐயா அவர்கள் “ஐயா… பரவால்ல இருக்கட்டும்…. உட்காருங்க… நன்றி” என்று கூறி இருக்கிறார்.

அந்தத் தருணம் தேவராஜ் பாண்டியன் மற்றும் அவரது கூட்டாளி சூரிமுத்து இருவரும் தன் இருக்கையிலிருந்து வெளியே வந்து வாக்குயோகி ஐயாவை அமரும் படி வலியுறுத்தி, ஐயா இறங்கும் வரை காவலாளி போல இரண்டு பேரும் நின்று கொண்டு வந்தார்களாம். அங்கே உட்கார்ந்து பயணித்த வாக்குயோகி அவர்கள் குறுகிய நேரத்திலே தான் இறங்கும் இடம் வந்ததால் வணக்கம் செலுத்தி இறங்கி விடுகிறார்.

வாக்குயோகி அவர்கள் இறங்கிய பின்னர் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு பிரயாணித்து வந்த திரு. முகுந்தன் அவர்கள், தேவராஜ் பாண்டியனிடம் அவருடைய கையினை தட்டி “உன்னிடம் பேசியவர் யார் என்று தெரியுமா??” என்று அவருக்குத் தெரிந்த ஜோதிட முகத்தைப் பற்றி கூறியிருக்கிறார்.

அதற்கு தேவராஜ் பாண்டியன் அவர்கள் “ஐயா நீங்க சொன்னது சரி… ஆனா ஜோதிடம் பார்ப்பதற்கு எந்த ஒரு தகவலையும் நான் அவர்கிட்ட கொடுக்கலையே!! இது மாயாஜாலம் மாதிரியில்ல இருக்கு….! ஒன்னும் புரியல ஐயா…! எஞ்சிய பிராரப்த கர்மாவை தன் குலத்தில் பிறப்பவர் கழித்து விடுவார் என்று மோட்சப் படியில் இருந்து, தன் குல மக்களைக் காத்துக் கொண்டிருக்கின்ற குலதெய்வமானது, ஒருவேளை வாக்குயோகி ஐயா ரூபத்துல ஏதாச்சும் என்கிட்ட சொல்ல நினைக்குதா?” என்று அவர்கள் ஸ்தம்பித்த நிலையைப் பார்த்த திரு. முகுந்தன் அவர்களுக்கு, அந்த பிரயாணம் என்றும் அவர் வாழ்நாளில் தன் மனதில் அழியாத வண்ணம் இருப்பதாக என்னிடம் கூறி நெகிழ்ந்தார்.

முடிவுரை

என்றென்றும் நன்றியுடன்....


- திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்