அற்புத நிகழ்வுகள்!

சுந்தரநாதரா? திருமூலரா? வாக்குயோகியா!!!

- திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்

நிகழ்வு தலைப்பு
1 சுந்தரநாதரா? திருமூலரா? வாக்குயோகியா!!!

முன்னுரை

சுந்தரநாதரா? திருமூலரா? வாக்குயோகியா!!!

மூன்றாவது கண் நிகழ்ச்சி

ஒரு நாள் வாக்குயோகி ஐயாவிடம் “என்ன இது மூன்றாவது கண் என்று நிகழ்ச்சிக்கு பெயரிட்டு இருக்கிறார்கள்” என்றதும், அவர் கூறியது “இந்த உடலுக்கு பிரதானம் சிரசு; சிரசிற்கு பிரதானம் கண்கள்; இரு கருவிழி நடுவே நெற்றி பொட்டின் மத்தியில் கருமை நிறைந்த வெற்றிடத்தில் ஒளியை காணும் திருச்சிற்றம்பலம் என்பது மூன்றாவது கண்ணின் இருப்பிடம். உலகில் உள்ள ஸ்தூலப் பொருட்களை, நம் இரு விழி மூலம் பார்வையிட்டு உணர்தலைத் தாண்டி சூட்சுமத்தில் இருக்கும் மெய்ஞானத்தினை உணர வேண்டுமாயின், இந்த சூட்சும மூன்றாவது கண் மூலம் பிரபஞ்சத்துக்கு பாலமிடுவது மட்டுமே வழி…. அவ்வழியில் உள்ள சூட்சும மனிதர்களை நேர்காணல் செய்யும் பொருட்டு இந்த பெயர்.“ என்றார்.

உடலுக்கு வயது குறைவு என்றாலும், பல நூறு வயதான ஆத்மாக்களை தேடி நாடும் இந்த சிறந்த நிகழ்ச்சி, வேந்தர் தொலைக்காட்சி என்ற கிரீடத்தில் ஆன்மீகத்தைச் சார்ந்த மாணிக்கக் கல்லாக திகழும் நிகழ்ச்சியாகும். அந்நிகழ்ச்சியில் வாக்குயோகி அவர்கள் கலந்துகொண்டு அள்ளித்தந்த அற்புத நிகழ்வுகளில் நான் கண்ட மற்றுமோர் மெய் சிலிர்த்த அற்புத நிகழ்வினை பதிவிடுகிறேன்.

தளராத மின்னல் ஒளி என பளிச்சிடும் விளக்குகள்…. நிகழ்ச்சி “கேமரா ஆக்சன்” என்று தொடங்கியது. வாக்குயோகி ஐயா அவர்களை நேர்காணல் செய்வது திரு. விஜயகுமார் அவர்கள். ஆன்மீகத் தகவல்கள் பலவற்றை ஐயாவிடமிருந்து வெளிக்கொண்டு வந்த திரு. விஜயகுமார் அவர்களுக்கு திடுக்கிடும் மணித்துளிகள் அவரை புரட்டிப் போட்டது.

ஆம், திடீரென்று “உங்கள் மனதில் எழும் பெயரை ஒன்று கூறுங்கள்” என்கிறார் வாக்குயோகி அவர்கள். அதற்கு திரு. விஜயகுமார் அவர்கள் தன் மனதிற்குள் அவர் கடந்த வாரம் பணி நிமித்தமாக தமிழ்ச்செல்வி என்கிற பெண்ணை சந்தித்தது சிந்தனைக்கு வந்ததால் அந்தப் பெயரை நினைத்துக் கொண்டார்.

ஒரு வெள்ளை காகிதம் மற்றும் ஒரு பேனாவை கேட்ட வாக்குயோகி அவர்கள் அந்தத் தருணமே தமிழ்ச்செல்வி அவர்களைப் பற்றிய பல குறிப்புகளை ஒன்றன் கீழ் ஒன்றாக வரிசைப்படுத்தி விட்டார். அதில் சிலவற்றை என்னுடைய நினைவில் இருப்பதைக் குறிப்பிடுகிறேன்;

 

என்று எழுதிய அந்த வெள்ளைத் தாளின் உண்மைத் தரவுகளை படித்த திரு.விஜயகுமார் அவர்கள், “என்ன இவர் என் உடல் என்ற கூட்டுக்குள் நுழைந்து என் வசம் இருக்கும் பதிவுகளை வெள்ளைக் காகிதத்தில் நொடிப் பொழுதில் மையிட்டு விட்டாரே. இவரது எழுதுகோலுக்கு இப்படி ஒரு மாபெரும் சக்தியா!! இல்லை… சித்தர்கள் கூடு விட்டு கூடு பாய்வது போல சில நொடிகள் என் உடலுக்குள் வந்து பதிவுகளை எடுத்துச் சென்றாரா??” என்று தன் மனதிற்குள் நினைத்ததை என்னிடம் கூறினார்.

நினைத்த அந்த மையக் கருத்தை கொண்டு அந்நிகழ்ச்சிக்கு தலைப்பிட, அந்நிகழ்ச்சி எப்பொழுதும் கண்டிராத இமயமலை அளவு விமர்சனங்களைப் பெற்றது என்று மனநெகிழ்ச்சி கொண்டதை நான் நேரடியாக கண்டு மகிழ்ந்தேன்.

கூடுவிட்டு கூடு பாயும் கலை சித்தர்கள், முனிவர்களின் மத்தியில் ஒரு அரிதான கலை.

இந்தக் கலையை கற்ற நாயன்மார்களில் ஒருவரான சுந்தரனார் என்பவர், ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக ‘மூலன்’ என்ற மாடு மேய்ப்பவனின் இறந்த உடலில் புகுந்து விடுகிறார். அதன் தொடர்ச்சியாக நடந்த நிகழ்வுகளில், விதிவசத்தால் அதே உடலில் இருக்க நேரிட்டு; திருவாவடுதுறை கோயிலின் அரச மரத்தடியில் மூலனின் உடலுக்குள் இருந்தே தியானத்தில் அமர்ந்து, மூவாயிரம் பாடல்கள் கொண்ட புகழ்பெற்ற திருமந்திரத்தை இயற்றினார். மூலனின் உடலைக் கொண்டு இயற்றியதால் அவர் திருமூலர் என்று அழைக்கப்பட்டார்.

இந்த ஒப்பனை கருத்துக்களுக்காக மட்டுமல்ல; அதில் இருக்கும் கூடு விட்டு கூடு பாயும் கதாபாத்திரத்தில் உள்ளவர்களை சேர்த்துப் பார்க்கிறேன்.

அந்நிகழ்ச்சியில் நான் கண்டது சுந்தரனாரா….? திருமூலரா….? இல்லை இந்தப் பிறவியில் எனது ஞானத்தேடலின் இலக்காக இருக்கும் என் குருநாதர் வாக்குயோகி திரு.சி. பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களா!

முடிவுரை

என்றென்றும் நன்றியுடன்....


- திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்