அற்புத நிகழ்வுகள்!

மெல்லிய காற்றும் வாசம் கொள்ளாமல் இவர் வசம்!

- திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்

நிகழ்வு தலைப்பு
1 மெல்லிய காற்றும் வாசம் கொள்ளாமல் இவர் வசம்!

முன்னுரை

மெல்லிய காற்றும் வாசம் கொள்ளாமல் இவர் வசம்!

மீன் வாசம் வரவில்லை

ஐயா வாக்குயோகி அவர்களின் பல நண்பர்களிடமிருந்து நான் கேட்டறிந்த திகைப்புக்குரிய அற்புத நிகழ்வுகளின் எண்ணிக்கைகள் மட்டுமன்றி, இந்தப் புத்தகத்தில் மையிட்டு பதிவு செய்கிற இந்நாள் வரை இந்த ஒன்பது வருடங்களில் என் கண்ணார கண்ட அற்புத நிகழ்வுகளும் ஏராளம்!!

 

எப்படி முதன்முறையாக “அட்சய லக்ன பத்ததி” தொலைக்காட்சியில் இடம் பிடித்தது என்ற நிகழ்வு இது…

வேந்தர் தொலைக்காட்சியில் “மூன்றாவது கண்” என்ற நிகழ்ச்சியில் வாக்குயோகி அவர்களை வரவழைத்து “அட்சய லக்ன பத்ததி” என்ற ஜோதிட முறையைப் பற்றி ஆச்சரியத்துடன், இதை உலகுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று இந்த வாக்குயோகியின் தெய்வீக ஆற்றலை உணர்ந்த அவரது நண்பர் கூறிய ஓர் அற்புத நிகழ்வு இது.

இந்த வாக்கு யோகியின் ஜோதிட ஆய்வு பின்னணி கொண்ட வாக்கு ஒவ்வொன்றும் தன் வாழ்க்கையில் பலிதம் ஆனதையொட்டி குறுகிய காலத்திலேயே நண்பராக மாறி விடுகிறார் “திரு பன்னீர்செல்வம்”. அந்த மூன்றாவது மாதத்தில் வாக்குயோகி அவர்களை தன் இல்லத்திற்கு அழைத்து விருந்து படைக்க ஆசைப்பட்டு வேண்டுகோள் வைக்க, வாக்குயோகி அவர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று வருவதாக வாக்களித்த வண்ணம் கைபேசியில் அந்த உரையாடல் முடிந்தது.

தன் குடும்பத்திற்கு நெருங்கிய மற்றுமோர் மூன்று நண்பர்களையும் வரவேற்ற திரு. பன்னீர்செல்வம், அந்நாளில் விருந்து பலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அசைவ உணவுகளை பிரதானமாக தயார் செய்யும்படி தன் வீட்டு ராணியிடம் விசேஷ அன்புக்கட்டளையிட்டிருக்கிறார்.

தங்கள் சுற்றமும் சூழ வருகை தந்து அந்நாளை சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க, வாக்குயோகி அவர்களும் அவரது நெருங்கிய நண்பர்களும் மொத்தம் ஐந்து பேர், அந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் பன்னீர்செல்வம் அவர்களது வீட்டில் காலடி எடுத்து வைக்கிறார்கள். இந்த ஐந்து நபர்களில் மூன்று பேர் அசைவம் சாப்பிடக்கூடியவர்கள்.

இருவர் தரப்பு நண்பர்களும் பேசத் தொடங்கி சில நிமிடங்களில் “தாங்கள் அசைவ உணவு உண்ணுவீர்கள் தானே” என்று வாக்குயோகியிடம் திரு.பன்னீர்செல்வம் கேட்க, “மன்னிக்கணும் நான் சைவம் மட்டும்தான்” என சிரித்தபடி பதிலளிக்கிறார் வாக்குயோகி!

“அடடா சரி” என்று கூறிய திரு.பன்னீர்செல்வம் உடனே வீடு முழுவதும் தன் வீட்டு பெண்களிடம் சொல்லி நீரினால் துடைத்தெடுக்க, “இன்னும் சற்று நேரத்தில் சைவ உணவும் தயாராகிவிடும்” என்று வாக்குயோகியிடம் தெரிவிக்கிறார்.

அசைவம் சாப்பிடக்கூடிய நண்பர்களிடம் திரு. பன்னீர்செல்வம் அனுமதி கேட்டு வாக்குயோகியிடம் “தாங்கள் உட்காருங்கள்” என்று சொல்லி சைவ விருந்தினை கொண்ட பதார்த்த பாத்திரங்களுடன் வாழை இலையை விரித்த போது; வாக்குயோகி அவர்கள் “ஐயா அனைவரும் உட்காருங்கள்…. சேர்ந்து உண்ணுவதே மகிழ்ச்சி” என்று கட்டளை பாணியில் கூறியது அலாதி அன்பின் வெளிச்சம்.

“அசைவ உணவு வாசம்!! முக்கியமா மீன் வருவலின் வாசம் உங்களால பொறுக்க முடியாது” என்று திரு.பன்னீர்செல்வம் சொன்னதும், “அதெல்லாம் ஒன்னும் இல்ல…. எல்லாரும் உட்காருவோம்…. எனக்கு சைவம் கொடுங்க; வேண்டியவர்களுக்கு அசைவம் கொடுங்கய்யா” என்றார் வாக்குயோகி.

சரி என்று அனைவரும் வாழை இலையில் வயிறார தன் நாவில் ருசி படைக்க, எப்பொழுதும் அளவாக உண்ணும் வாக்குயோகி அவர்கள் உணவை முடித்து வராண்டாவில் உள்ள இருக்கைக்குச் சென்று அமர்கிறார்.

அதுவரை வராத அசைவ உணவுகளின் வாசம் திடீரென்று குப்பென வீசியதாம்.

மீன் வருவலின் ருசி தன் நாவில் சுவை நரம்புகளை தட்டி எழுப்பி குட்டிக்கரணம் அடிக்கும்பொழுது, அந்தக் கூட்டத்தில் ஒருவர் “என்ன இது இப்பதான் மீன் வாசமே வருது…… அதுவும் ஐயா சாப்பிட்டு எழுந்து போனதுக்கப்புறம்” என்று திகைத்த பன்னீர் செல்வம் அவர்களின் நண்பர், அடுத்த ஒரு மீன் துண்டை எதிர்பார்த்துக் கொண்டு, குழம்பு பிணைந்த சாதத்தோடு இணைக்கிறார்.

சில வினாடிகள் கழித்து, திரு. பன்னீர்செல்வம் உட்பட நான்கு பேர் ஒருவரை ஒருவர் பார்த்து “ஆமால்ல!!! அவர் நம்முடன் இருக்கும் போது இந்த மீன் வாசம் வரவேல்லியே!!!” என்று சொல்லி வியப்புடன் வாக்குயோகியை எட்டிப் பார்த்த வண்ணம், ஒருவேளை இங்கிருக்கும் காற்றைக்கூட தன் வசப்படுத்திவிட்டாரா! என்ற பிரம்மிப்புடன் அந்த விருந்தோம்பல் முடிவுக்கு வந்ததாம்.

முடிவுரை

என்றென்றும் நன்றியுடன்....


- திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்