அற்புத நிகழ்வுகள்!

“வீராவே” பைரவனாக - தட்சிணாமூர்த்தியை உணர்த்திய முதல் பாலம்!!!!

- திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்

நிகழ்வு தலைப்பு
1 “வீராவே” பைரவனாக - தட்சிணாமூர்த்தியை உணர்த்திய முதல் பாலம்!!!!

முன்னுரை

“வீராவே” பைரவனாக - தட்சிணாமூர்த்தியை உணர்த்திய முதல் பாலம்!!!!

பைரவர்(வீரா) கிடைத்த சந்தோஷம்

“வீரா” எங்கள் வீட்டில் பாசம் என்ற வார்த்தைக்குப் பிரதான நாயகன். நாங்கள் வெளியூர் சென்றாலும் அங்கிருந்து கைபேசியின் மூலம் மாமியாரிடம் வீராவுக்கு உணவு அளித்தார்களா? என்று கேட்காமல் இருந்ததில்லை.

என்னுடைய இரண்டு பிள்ளைகளுக்கும் வீராவிடம் பேசி விளையாட அலாதி பிரியம்!! நாங்கள் வெளியூரிலிருந்து திரும்பி வந்து வெளிக்கதவின் தாழினை திறக்கும் பொழுதே எங்களைத் தழுவிக் கொள்வான்!! எங்கே சென்றீர்கள்? எப்படி இருக்கிறீர்கள்? தற்காலிகப் பிரிவை ஏன் தந்தீர்கள்? உங்கள் வாசம் இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்பது தெரியாதா? என்று பலமுறை ஒலித்த ஒரே சத்தத்தின் வினா எங்கள் செவியில் கேட்கும்…

எங்கள் செல்ல நாய்க்குட்டி வீரா!!!

அன்றொரு நாள் மாலை நேரம். என் கை முழுவதும் மருதாணியின் கோலங்கள்; மஹாலட்சுமி என் விரலில் குடியேற தன் நிறத்தை பறி கொடுக்க, ஈரப்பதத்தை இழந்துக் கொண்டிருந்தாள். வீராவின் குரல் வெகு நேரமாக கேட்கவில்லையே என்று பள்ளிப் பாடம் எழுதிக் கொண்டிருந்த என் மகனை தேடச் சொல்கிறேன். வீடு முழுவதும் அலைந்து தேடி பதட்டத்துடன் வீராவைக் காணவில்லை என்றான்.

வீட்டு வாசலின் வெளியே வந்து, தலை வடக்கு தெற்காக தூரப்பார்வையிலும் அவன் அகப்படவில்லை.

திடீரென வீட்டிற்குள் மேஜை மீது இருந்த கைபேசியின் அழைப்பு சத்தத்திற்கு என் மகன் ஸ்பீக்கரை போட்டது, நான் பேசுவதற்கு வசதியாக இருந்தது.

“அட்சய லக்ன பதத்தி” இயற்றிய திரு.சி. பொதுவுடைமூர்த்தி ஐயாவின் குரல்!! வழக்கம் போல “என்னையா!! அங்க என்ன நடக்குது?”, “ஏன் குரலில் பரபரப்பு?” என்றார். எங்கள் தவிப்பு நிலையை விவரிக்க வீராவை காணவில்லை என்றதும் “அவ்வளவுதானே! இதுக்கு ஏன்யா கவலைப்படறீங்க. உங்க வீட்ல இருந்து மூணாவது தெருவுல ஒரு சாக்குக்குள்ள சிக்கி இருக்கான்… போய் பாருங்க…!!” என்றார்.

என்ன விளையாட்டா ஏதோ சொல்றாரே! என்று மற்ற விஷயங்களை பேசிக் கொண்டிருந்த அந்த இரண்டே நிமிடம் முடியும் தருணம்; அடுத்த நாள் கோவில் விழாவிற்காக, பிரசாத பஞ்சாமிர்தத்தில் கலக்க, 1 கிலோ தேனை வாங்கிவர சென்ற எனது மாமியார் வீடு திரும்பும் அந்த நொடி கையில் தேனுடன் வீராவை தாங்கிப் பிடித்த வண்ணம் வாசலின் உள்ளே நுழைகிறார்!!!

உடனே ஐயாவிடம் “ஒரு நிமிஷம் ஐயா“ என்று அனுமதி கேட்டு விட்டு எனது மாமியாரிடம் வீராவை எங்கு கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டவுடன் “அட மூணாவது தெருவுல ஒரு கோணி பைக்கு அடியில சிக்கிக்கிட்டு இருந்தான்!! வீரா என்ன பண்றான் இங்கன்னு; தூக்கிட்டு வந்துட்டேன்” என்றதும் நானும் எனது பிள்ளைகளும் வாயடைத்துப் போய் ஒருவரை ஒருவர் நோக்கி கொண்டு, உணர்வில் கடவுளை பார்த்தது போல ஆச்சர்யத்தில் தொண்டையை ம்ம்.. ம்… என்று சரி செய்து ஐயாவிடம் மறுபடியும் பேச ஆரம்பித்தேன். இடையில் என் மகன் “அம்மா!! வீரா அங்கிள்கிட்ட போன் பண்ணி சொல்லி இருப்பானோ!!!” என்றதும் வீடு முழுவதும் சிரிப்பு சத்தம்.

"மூணாவது தெரு….." எப்படி!!

அதுவும் "சாக்குப்பை"??

பன்முனை நரம்பில் இருந்து மூளைக்கு முட்டி மோதிய பிரமிப்பை எப்படி எடுத்துரைப்பது?

இந்த அற்புத நிகழ்வு நடந்தது நன்கு நினைவில் இருக்கிறது! ஐயாவிடம் பழகி இரண்டாவது மாதம்; அன்னாரது இறை சக்தியை உணர்ந்த நாங்கள் அவருடன் ஆன்மீகப் பயணத்தில், ஜோதிட ஞானம் பருகுவதில் நானும் எனது குடும்பமும் விருப்பத்தோடு இணைந்தோம்.

அன்று முதல் நீங்கள் இந்த தொகுப்பை படிக்கும் இந்நாள் வரை எனக்கு “பிரம்மலோக இணைப்பு!! இந்த குருவின் மூலம்....”.

முடிவுரை

என்றென்றும் நன்றியுடன்....


- திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்